'தளபதி 63 ' படத்தில் இந்துஜாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 15, Apr 2019, 6:07 PM IST
vijay 63 movie indhuja character will be leaked
Highlights

'தளபதி 63 ' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகை இந்துஜாவின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

'தளபதி 63 ' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகை இந்துஜாவின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் 'தளபதி 63 ' ஏற்கனவே வெளியான இரண்டு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனை நிகழ்த்தியதால், இந்த படத்தின் மீதனான எதிர்ப்பார்ப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் குறைவில்லை.

அவ்வப்போது, இந்த படம் குறித்து, பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் 'மேயாத மான்' இந்துஜா பற்றிய புதிய அப்டேட் கசிந்துள்ளது.

அதாவது அதாவது இவர் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கும் விஜய் அணியின் கேப்டனாக நடித்து வருகிறாராம். மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கால்பந்து விளையாட்டு அரங்கம் உருவாக்குவதில் படக்குழுவினர் முன்புறமாக இருப்பதாகவும் இந்த அரங்கில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில், யோகி பாபு, டானியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

loader