Asianet News TamilAsianet News Tamil

தளபதி 63 -ல் இணைந்த பிரபல நடிகர்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் இணைத்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

vijay 63 movie famous actor committed the main role
Author
Chennai, First Published Mar 22, 2019, 7:27 PM IST

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் இணைத்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக வட சென்னை பகுதிகளில் நடந்தது. விஜயை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் அளவிற்கு அதிகமாக ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை கட்டு படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின் போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது .

vijay 63 movie famous actor committed the main role

இதனால் படப்பிடிப்பு இடத்தை மாற்றுவதாக கூறப்பட்ட நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம், தளபதியோடு இணைத்துள்ள முக்கிய நடிகர் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் புதிதாக பாலிவுட் நடிகரும், 'ஆரண்ய காண்டம்' , 'மாயவன்' போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான ஜாக்கி ஷெராப்,  இணைந்துள்ளார். இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இவர் விஜயுடன் மோதும் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

vijay 63 movie famous actor committed the main role

ஏற்கனவே இந்த படத்தில் டானியல் பாலாஜி வில்லனாக நடித்து வரும் இந்நிலையில் இவரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  

Follow Us:
Download App:
  • android
  • ios