Asianet News TamilAsianet News Tamil

நயனும் வேண்டாம் சமந்தாவும் வேண்டாம்? 'தளபதி 63 ' ஹீரோயின் பற்றி வெளியான புது தகவல்!

பல்வேறு சர்ச்சைகள், அரசியல் எதிர்ப்புகளை கடந்து விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வெளியான கையேடு தன்னுடைய அடுத்த படம் பட வேலையில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். 
 

vijay 63 heroine name leaked
Author
Chennai, First Published Nov 15, 2018, 6:40 PM IST

பல்வேறு சர்ச்சைகள், அரசியல் எதிர்ப்புகளை கடந்து விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வெளியான கையேடு தன்னுடைய அடுத்த படம் பட வேலையில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். 

vijay 63 heroine name leaked

ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் அட்லீ என்றும், தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியது. அதே போல் இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக மீண்டும் இதே கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. 

vijay 63 heroine name leaked

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா நடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புது நடிகை ஒருவரை கமிட் செய்வது குறித்து அட்லீ யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

vijay 63 heroine name leaked

தெலுங்கில் நடிகர் விஜய் தேவார கொண்டா நடித்த 'கீதா கோவிந்தம்' படத்தில் நாயகியாக நடித்த  நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக  ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios