vijay 62nd movie fighting shots leeked
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
'காலா லீக்'
இந்த நிலையில் 'காலா' படத்தில் இருந்து 14 வினாடி சண்டைக்காட்சி சமீபத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாகியது. 
'விஜய் 62 லீக்'
இதைத்தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 62' படத்தின் 10 வினாடி சண்டைக்காட்சி ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் மிகுந்த பாதுகாப்புடன் நடந்து வரும் நிலையில் இப்படி விஜய் படத்தின் சண்டை காட்சி வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.
மொட்டை மாடியில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த சண்டைகாட்சியின் வீடியோ எப்படி வெளியானது என படக்குழுவினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கூடுதல் பாதுகாப்பு:

இந்த சம்பவத்தை தொடர்ந்து இனி படப்பிடிப்பு தளத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
