விதி யாரை விட்டது?. தனது உயிர்க்காதலி நயன்தாராவுடனான நெருக்கத்துக்கு டாட்டா காட்டிவிட்டு இன்னும் சில தினங்களுக்கு நடிகை அஞ்சலியுடன் நெருக்கமாக இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு. நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் படத்தில் அஞ்சலிதான் கதாநாயகி என்பது மட்டுமே மேட்டர்.

’பேரன்பு’, ’லிசா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சில மாதங்கள் சும்மா இருந்த  அஞ்சலி கைவசம் தற்போது  ’நாடோடிகள் 2’, கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், மாதவன் நடிக்கும் ’சைலன்ஸ்’ ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படம் ஒன்றுக்கு பெரும் சம்பளம் சொல்லப்படவே மறுவார்த்தையின்றி ஒப்புக்கொண்டாராம் அஞ்சலி.

தற்போது அஞ்சலி விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். நான்கு குறும்படங்களை உள்ளடக்கிய ஆந்தலாஜி பாணியில் உருவாகும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காகத் தயாராகிறது. நான்கு இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.மற்ற குறும்படங்களை வெற்றி மாறன், சுதா கொங்காரா, கௌதம் மேனன் ஆகியோர் இயக்குகின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள நிலையில் அந்த குறும்படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஒரு நாளும் உனைப் பிரியாத வரம் வேண்டும் என்பது படங்கள் இயக்கும் ஆசையைக்கூட துறந்து சதா 24*7 நயன்தாராவுடனேயே டேரா அடித்துவந்த விக்னேஷ் சிவன் அஞ்சலியுடனான குறும்படத்தை நல்லபடியாக முடித்துக்கொண்டு விரைவில் தலைவியின் காலடியில் தஞ்சமடைவார் என்று நம்புவோம்.