நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், 'நானும் ரெளடிதான்' படத்தின்போது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதே போல் இருவரும் தற்போது லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் உள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது தன்னுடைய பெயரில் திடீரென சிறிய மாற்றம் செய்துள்ளார் அதுவும் காதலர் தினத்தன்று. Vignesh Sivan என்று இருந்த அவரது பெயர் தற்போது Vignesh Shivn என்று மாற்றியுயள்ளார்.

இதை உறுதி செய்யும் வகையில் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் புதிய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நியூமிராலஜிக்காக இந்த மாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் தற்போது இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.