திரையுலகை பொறுத்த வரை, அடிக்கடி பல சர்ச்சைகள், மற்றும் பிரச்சனைகள் வந்து ஓய்வது சகஜம் தான். அந்த வகையில் தற்போது வரை, புகைந்து கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று, 'மீடூ' பிரச்சனை. இதை தொடர்ந்து தற்போது பலர் மத்தியில் நயன்தாரா பற்றி நடிகர் ராதா ரவி இரட்டை அர்த்தத்தோடு பேசியுள்ளது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

நேற்று நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய, மூத்த நடிகர் ராதா ரவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியுள்ளதற்கு பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கோபமாக சில பதிவுகளை போட்டுள்ளார்.  இது குறித்து அவர் கூறியிருப்பது "ஒரு பழம்பெரும் நடிகர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இழிவான வகையில் ஒருவரை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு எதிராக எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். அதற்கும் மேலாக தரமற்ற இந்த பேச்சுக்கு கைதட்டி சிரிக்கும் பார்வையாளர்கள் குறித்தும் வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு முழுமை பெறாத படத்திற்கு ஏன் இப்போது புரமோஷன் என்றே தெரியவில்லை. இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஏற்கனவே படத்தில் இருந்து விலகிவிட்ட நிலையில் பொருத்தமில்லாதவர்களை வைத்து நடத்தும் இதுபோன்ற ஒரு புரமோஷன் நிகழ்ச்சி தேவையா?

 கண்டனத்தை தெரிவித்து எந்த சங்கமும் ராதா ரவி பேச்சை கண்டிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள .

 

 

வேலையில்லாதவர்களை கூப்பிட்டு இதுபோன்ற தகாத கருத்துக்களை வாந்தியெடுக்க செய்வதற்கென்றே ஒரு விழாவா? எப்படியும் இதுபோன்ற சம்பவத்திற்கு நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காது என்பதும் ஒரு சோகமான உண்மை என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாடகி சின்மயியும், நயன்தாராவிற்கு எதிராக ராதா ரவி பேசியுள்ளதற்கு தன்னுடைய கண்டனத்தை கண்டனத்தை தெரிவித்து எந்த சங்கமும் ராதா ரவி பேச்சை கண்டிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள .