இயக்குனர் விக்னேஷ் சிவன், அண்மையில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் உள்ள கெட்டப்பை பார்த்து, ரசிகர்கள் ஷாக்காகி அவரிடம் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் மற்றும் கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் பார்க்கப்படும் நடிகை நயன்தாராவும், கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். ஆனால் திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு மட்டும் இருவரும் பதில் சொல்லுவது இல்லை. மேலும் நயன்தாரா 100 படங்களில் நடித்து முடித்த பிறகு தான் திருமணம் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நயன்தாரா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இதனால் நயனை சந்திக்க விக்னேஷ் சிவன் மும்பை சென்று, தன்னுடைய காதலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இதை தொடந்து, அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு இஸ்லாம் மத வழக்கப்படி வெள்ளை நிற தொப்பி அணிந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் பலர் நீங்கள் மதம் மாறி விட்டேர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

அஜ்மீர் தர்காவை பொறுத்தவரை, மதம், மொழி, வேறுபாடு இன்றி... பலரும் வழிபடும் தளம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கங்கோரா இருவரும் 'சூரரை போற்று' படத்தின்  பூஜைக்கு முன்பு  அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபாட்டு வந்தனர்.