நடிகர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்... நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நானும் ரவுடிதான்'. இந்த படத்தில் நயன்தாரா, வாய் பேசமுடியாத... காது கேட்காத, காதம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதே போல் வசூலையும் அள்ளியது.

இந்த திரைப்படம் வெளியாகி 5 வருடம் ஆகும் நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி , நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன் என மூவரும் ஒரு படத்திற்காக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில், நயன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடிக்க உள்ளனர்.

தற்போது விஜய் சேதுபதி, மாஸ்டர் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாலும், தொடர்ந்து அடுக்கடுக்காக படங்களில் நடித்து வருவதாலும், கூட இவர் தான் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம் விக்னேஷ் சிவன். எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு, மே மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.