Asianet News TamilAsianet News Tamil

லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போகப்போறோம் - நயனுடன் திருமணம்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்

Nayanthra Vignesh Shivan Wedding : திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11-ந் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறினார். 

vignesh shivan officially announces his wedding with nayanthara
Author
Tamil Nadu, First Published Jun 7, 2022, 11:26 AM IST

சிம்புவின் போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன். அடுத்ததாக இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம், அவரது கெரியருக்கும், வாழ்க்கைக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படம் பிளாக்பஸ்டர் ஹிட்டனது. அதேபோல் இப்படத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. அந்த கேள்விக்கு தற்போது தான் விடை கிடைத்துள்ளது. வருகிற ஜூன் 9-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

vignesh shivan officially announces his wedding with nayanthara

இதனை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போகப்போறோம். எனது காதலி நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். எங்களது திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. அன்று மதியம் எனது சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படம் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

திருமணத்தில் நெருங்கிய நட்பு வட்டம் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்த விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11-ந் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். 

இதையும் படியுங்கள்... Madhavan : அன்றும்... இன்றும் அதே காதலுடன் - திருமண நாளில் மனைவியின் போட்டோவை பகிர்ந்து உருகிய மாதவன்

Follow Us:
Download App:
  • android
  • ios