காதல். அது பிக்காசோ ஓவியம் போல! எந்தப்பக்கம் திருப்பினாலும் குழப்பம் இருக்கும். அதே நேரத்தில் அதில் ஆழமான ஒரு அர்த்தமும் இருக்கும்! கைவசம் இப்படி சில பிக்காசோ ஓவியங்களை வைத்திருந்த நயன்தாரா, எல்லாவற்றையும் விட்டுத் தொலைத்துவிட்டு விக்னேஷ் சிவன் என்கிற ஒரே ஒரு ஓவியத்தோடு செட்டில் ஆகிவிட்டார். அதற்கப்புறம் என்னவாம்? ‘நிம்மதியான நினைப்பு. நீக்கமற அணைப்பு’என்று போய் கொண்டேயிருக்கலாம் அல்லவா?

இந்த நிலையில் தான் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி விக்னேஷ் சிவனை விரக்தியடைய வைத்ததாக தகவல்கள் தந்தியடித்தன. நல்லவேலை விக்னேஷ் சிவன் மனதிற்கு இதமளித்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ’’பிரபுதேவா இயக்கத்தில் விஷால்- கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் 'கருப்புராஜா வெள்ளைராஜா'. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. 

இதனிடையே, இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாகவும், இப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், ஐசரி கணேஷ் அளித்துள்ள விளக்கத்தில், 'கருப்புராஜா வெள்ளைராஜா' படம் மீண்டும் உருவாகவில்லை. அதுகுறித்து பரவிவரும் செய்திகள் உண்மையில்லை. அது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி" என கூறியுள்ளார்.