vidyabalan reject rajini movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த வருடம் வெளியான 'கபாலி' படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு மே 28-ஆம் தேதி துவங்க இருக்கிறது என்று படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு கதாநாயகி யார் என தற்போதுவரை குழப்பம் நிலவி வருகிறது.

ஏற்கனவே, இந்த கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை வித்யா பாலன் பொறுத்தமாக இருப்பார் என ரஞ்சித் விரும்பியதால், இது குறித்து படக்குழுவினர் வித்யா பாலன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகை வித்யா பாலன் அதற்கான கால்ஷீட்டையும் அளித்தார்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை துவங்க முடியாததால், வித்யா பாலன் அளித்த தேதிகள் தற்போது வீணாகிவிட்டதாம். 

இந்த மாத இறுதியில் தான் படப்பிடிப்பு துவங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் படக்குழுவினர் வித்யா பாலனை அணுகியுள்ளனர். 

ஆனால் அந்த தேதிகளில் வேறு ஒரு பாலிவுட் படத்திற்கு கால் ஷீட் அளித்துவிட்டதாகவும், ரஜினி படமாக இருந்தாலும் தற்போது நான் நடிக்க தயாராக இல்லை என கறாராக கூறி விட்டாராம்.

இதன் காரணமாக தற்போது படக்குழுவினர், ரஜினிக்கு கதாநாயகியாக நடிக்க மற்றொரு நடிகையை தீவிரமாக தேடிவருவதாக கூறப்படுகிறது.