தல அஜித் நடிப்பில், பொங்கல் ரிலீசாக வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.  8  தினங்களில், உலக அளவில் ரூ.200 கோடி வசூலை குவித்திருப்பதாக செய்திகளும் பரவலாக வெளியாகி வருகிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடந்து, தற்போது அஜித் அடுத்ததாக தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக உருவாக உள்ள இந்த படத்தில், அஜித் அமிதாப் பச்சன், ஏற்று நடித்த கேரக்டரில் நடிக்கவுள்ளார். 

மேலும் மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகளின் தேர்வு நடந்து வந்தது, ஏற்கனவே நடிகை நஸ்ரியா, அதில் ஒருவராக நடிக்க உள்ளார் என்பதை அவரே உறுதி செய்தார். இதை தொடர்ந்து நடிகை வித்யா பாலனும் கமிட் ஆகியுள்ளார். 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள நடிகை வித்யா பாலன், 'பொதுவாக எனக்கு ரீமேக் படத்தில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்ற கேரக்டர் இருப்பதாக கூறி போனிகபூர் எனக்கு அழைப்பு விடுத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை காரணமாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார். இதன் மூலம் அஜித்துக்காக இவர் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை என்பது தெரிகிறது. நடிகை நயன்தாரா முதல் பல நடிகைகள் அஜித்துக்காக மட்டுமே அவருடைய படத்தில் நடிக்க ஆசைப்படும் நிலையில் இவர் இப்படி கூறியுள்ளது ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.