veveham tesar

அஜித் ரசிகர்கள் அனைவரும், ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விவேகம் படத்தின் டீசர் இன்னும் ஒரு வாரத்தில் வரவிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த டீசரில் என்னென்ன காட்சிகள் இடம்பெறுகிறது என்று ஒரு சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த டீசரில், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் பயந்து நிற்கும் காட்சி இடம்பெறுவதாகவும். அஜித் மற்றும் விவேக் ஓப்ராய் நேரடியாக சண்டை போடுவது போல் ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆக்ரோஷமாக அஜித், கட்டையை தூக்குவது போல தோன்றும் காட்சியும் பைக் ரைடிங் செய்யும் காட்சிகளும் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.

இப்படியெல்லாம் ஒரு பக்கம் விவேகம் குறித்து பல தகவல்கள் வந்தாலும், உண்மையில் என்ன காட்சிகள் இடம்பெறும் என மே 11ம் தேதி கண்டிப்பாக தெரிந்துவிடும்... அது வரை காத்திருப்போம்.