vevegam teser relese date conformed
இயக்குனர் சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு, மிக பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 'விவேகம்' படத்தின் டீசர் மே 18 வெளிவரும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதற்கு முன்பே வெளிவரும் என அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது மே 11ஆம் தேதியே 'விவேகம்' டீசர் வெளியாகவுள்ளது என்று இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
மேலும் பல்கேரியாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் டீசர் வெளியாகும் நாளில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னையில் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அஜித் ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர். ஏற்கனவே வெளியான முதல் பார்வையையே மாஸாக வரவேற்ற ரசிகர்கள், தல டீசரை பிரமாண்டமாக வரவேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதே போல் மிகவும் பிரபலமான பாகுபலி டீசரை விவேகம் மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
