Viduthalai: திரையரங்கங்களில் சிறகடித்து பறக்கிறதா... சிறகொடிந்து கிடக்கிறதா 'விடுதலை'! ரசிகர்களின் விமர்சனம்!
'வெற்றிமாறன்' இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், மிகபெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'விடுதலை' திரைப்படம் குறித்து, ரசிகர்கள் கூறிய விமர்சனங்கள் இதோ...
வெற்றிமாறன் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கி வந்த திரைப்படம், 'விடுதலை'. இந்த படத்தின் மூலம் இதுவரை, காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த, சூரி... கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், மார்ச் 31-ந் தேதி, அதாவது இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, துணைவன் என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரி போலீசாக நடித்துள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையைத்துள்ளார்.
இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் சத்தியமங்கலம் காட்டு பகுதியில், பல்வேறு இடஞ்சல்களுக்கு மத்தியிலும் சவால்களுக்கு மத்தியிலும் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட நிலையில், இப்படம் ரசிகர்கள் மத்தியில் எப்படி பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது? என்பது குறித்து... ரசிகர்கள் கூறியுள்ள ட்விட்டர் கருத்துக்கள் இதோ...
விடுதலை முதல் பாகம், மிகவும் பிரமிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாகவும், சூரியின் நடிப்பு... இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி காட்சியில்... அபாரம் என்றும், கண்டிப்பாக இந்த படத்திற்காக சூரிக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர், விடுதலை படம் பிளாக் பஸ்டர் வெற்றி என்றும், இரண்டாம் பாகத்திற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து இப்படம் குறித்து பேசியுள்ள ரசிகர், விடுதலைப் படத்தின் முதல் பாகத்திற்கு தாராளமா 5 ஸ்டார் கொடுக்கலாம். வெற்றிமாறனின் கடுமையான உழைப்பும்,காவல்துறையின் கொடூரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய தோலுரித்து இப்படம் காட்டியுள்ளது. சூரியின் திறமையான நடிப்பு படத்திற்கு பலம் என்றும், விஜய் சேதுபதி வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத படம் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலை படம், வெற்றிமாறனிடமிருந்து சூரிக்கு கிடைத்த வாழ்நாள் கதாபாத்திரம் . அவரின் ஆதிக்கமே அதிகமாக இருந்ததாக, தெரிவித்துள்ளார்.
திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா இப்படம் குறித்து கூறுகளில்... விடுதலை முதல் பாகத்திற்கு, 4.5 ஸ்டார்ஸ் கொடுத்து, வெற்றிமாறன், அவரின் தனித்துவமான ஸ்டைலில் இயக்கியுள்ள உயர்தரமான திரைப்படம் இது. சூரியின் நடிப்பு பிரமாதம், விஜய் சேதுபதியின் வெறித்தனமான நடிப்பை பார்க்க முடிகிறது. பவானி ஸ்ரீ தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜா அருமையான இசையை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.