'நிழல்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, பாலைவன சோலை, கல்யாணகாலம், தூரம் அதிகம் இல்லை, சின்ன பூவே மெல்ல பேசு, போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜசேகர்.

இவர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். திரையுலகத்தில் பட வாய்ப்புகள் மற்றும் திரைப்படங்களை இயக்குவதை விட்ட பின்,  சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, சத்யா, போன்ற பல சீரியல்களில் நடித்து தன்னுடைய காமெடியான கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

இவருக்கு தாரா என்கிற மனைவி மட்டுமே உள்ளார். குழந்தைகள் இல்லை. எனவே கணவர் ஆசை பட்டு வாங்கிய புதிய வீட்டில் தாரா மட்டுமே தற்போது தனியாக வசித்து வருகிறார்.

தாரா தனியாக இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள சில மர்ம நபர்கள் இவருக்கு தொடர்ந்து தொந்தரவு தருவதாக தற்போது மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இவருக்கு தொந்தரவு கொடுப்பது யார் என்பதை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.