Asianet News TamilAsianet News Tamil

Breaking: பிரபல தயாரிப்பாளர் உடல்நல குறைவால் காலமானார்..!

பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 8:55 மணியளவில் காலமானார்.
 

veteran producer Katragadda Murari pass away
Author
First Published Oct 15, 2022, 11:29 PM IST

ஆந்திராவை சேர்ந்த தயாரிப்பாளர் கத்ரகடா முராரி, ஜூன் 14, 1944 ஆம் ஆண்டு பிறந்தார். K. முராரி என்று அழைக்கப்படும் மூத்த தெலுங்கு தயாரிப்பாளர் கத்ரகடா முராரி. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78.

கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்டவர். யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் இசையால் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ், ஜந்தியாலா போன்ற சிறந்த இயக்குனர்களை வைத்து திரைப்படங்களை எடுத்துள்ளார். அவர் பத்துக்கும் குறைவான படங்களைத் தயாரித்திருந்தாலும், அவற்றில் பல இன்று கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

"தெலுங்கு சலனசித்ரா நிர்மதலா சரித்ரா" என்ற தலைப்பில் தெலுங்கு தயாரிப்பாளர்களைப் பற்றிய புத்தகத்தை வெளியிடுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 'சீதாமலட்சுமி', 'கொரிண்டாக்கு', 'திரிசூலம்', 'சீதாராம கல்யாணம்', 'ஜானகி ராமுடு', 'ஸ்ரீனிவாச கல்யாணம்', 'ஜெய் காந்தலு' 'நாரி நரி நடுமா முராரி', 'அபிமன்யுடு' ஆகிய படங்கள் இவர் தனது பேனரில் தயாரித்த படங்கள். அவரது படங்கள் அனைத்தும் கே.வி.மகாதேவன் மட்டுமே இசையமைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான 'நாரி நாரி நாடுமா முராரி' என்கிற படத்தை தயாரித்திருந்தார். பின்னர் திரையுலகில் இருந்து விலகியே இருந்த இவர், தன்னுடைய 78 ஆவது வயதில் இன்று காலமானார். சமீப காலமாகவே வயது மூப்பு காரணத்தால் வரும், பிரச்சனைகளால் அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மரணம் குறித்து தகவல் வெளியாகி தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆஸ்த்தியுள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரின் மறைவிற்கு தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios