சினிமாவில் நடிப்பையும் தாண்டி பட வியாபாரத்திலும் காலூன்றி, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் நிதின் சத்யா.

'ஜருகண்டி' படத்திற்கு பிறகு தற்போது நிதின் சத்யா ஒரு புதிய படம் படத்தை அதிக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் முதல்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வைபவ்.

கதாநாயகியாக 'தெய்வமகள்' செயல் நாயகி வாணி போஜன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில்,  ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் முதல் முறையாக தெறிக்கவிடும் வில்லனாக, இயக்குனர் வெங்கட் பிரபு நடிக்கிறார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது. மேலும் இந்த படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைகோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மென்மேல் அதிகரித்துள்ளது.  

சஸ்பென்ஸ் திகில் படமாக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவை இணை இயக்குனராக பணியாற்றிய ஷானி சார்லஸ் இயக்குகிறார். தற்போது 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.