இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர் கங்கை அமரனின் பேத்தியும், வெங்கட்பிரபுவின் மகளுமான ஷிவானி   தற்போது ஒரு பிரபல இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், தற்போது நண்பர்களுடன் சேர்ந்து பாடியுள்ள ஆங்கில பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஷிவானி தனது ஐந்து வயதிலேயே ‘தாலி’ என்ற ஆல்பத்தில் பாடியதன் மூலம் தான் ஒரு இசை பாரம்பரியத்தில் பிறந்தவர் என்பதை நிரூபித்தவர். இசைமேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக தற்போது இசைப்பள்ளியின் பயின்று வருகிறார். 

இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற இந்த Lazarus பாடலை தங்கள் பாணியில் ஷிவானி உள்ளிட்ட மாணவ மாணவிகள் இசையமைத்து பாடிய இந்த பாடலுக்கு இசை ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஷிவானி குழுவினர்கள் தனியாக ஒருசில பாடல்களை கம்போஸ் செய்து பாடியுள்ளனர் என்பதும் அந்த பாடல்களும் இசை ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் மகள் பாடியுள்ள, பாடல் இதோ...