அஜித் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து கண்டிப்பாக அஜித்துடன் இணைந்து பணியாற்றுவேன் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தல அஜித், மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மங்காத்தா'. இந்த படம் தற்போது வரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. 

இதனால் இயக்குனர் வெங்கட் பிரபு எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அவரிடம் ரசிகர்கள் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என ஆவலோடு கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டுள்ளனர் ரசிகர்கள். அதற்கு வெங்ட் பிரபு " 'மங்காத்தா-2'விற்கு நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. எங்கு சென்றாலும் பலர் இந்த கேள்வியை தன்னிடம் கேட்டு வருகிறார்கள். 

இந்த கேள்விகள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதே வேளையில், பயமும் உள்ளது. எனினும் கண்டிப்பாக ரசிகர்களின் வேண்டுகோளுக்காவது முடிந்த வரை நடிகர் அஜித்துடன் கூடி விரைவில்  ஒரு படம் பண்ணுவேன். அது, 'மங்காத்தா-2'வாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா ஒரு படம் பண்ணப் போகிறேன் என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.