Asianet News TamilAsianet News Tamil

டிஜிட்டல் பக்கம் ஒதுங்கும் வெங்கட் பிரபு!

சென்னை 28 , மங்காத்தா, உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் வெங்கட் பிரபு.  தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

vengat prabu direct web series?
Author
Chennai, First Published Jul 20, 2019, 6:27 PM IST

சென்னை 28 , மங்காத்தா, உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் வெங்கட் பிரபு.  தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவை வைத்து இவர், 'மாநாடு' என்கிற படத்தை இயக்க தயாரான வெங்கட் பிரபு, ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு, தள்ளிக்கொண்டே போகிறது.  நடிகர் சிம்புவும் உடல் எடையை குறைத்த பின் அடுக்கடுக்காக பல படங்களில் பிசியாகி வருகிறார்.  எனவே திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் உருவாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

vengat prabu direct web series?

இந்நிலையில் வெங்கட் பிரபு,  பிரபல சமூக வலைதளம் ஒன்றிற்கு ஒன்றிற்கு டிஜிட்டலில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து வெங்கட் பிரபு தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios