‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்த நிலையில், 3-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்த சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். இப்படத்துக்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ள சிம்பு, தன்னுடைய பாணியில் இருந்து சற்று மாறி, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை காயடுலோஹர் நடிக்கிறார்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்த நிலையில், 3-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 10-ந் தேதி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக சிம்பு தனது செண்டிமெண்ட் நம்பரான 9, வரும்படி தான் ரிலீஸ் நேரத்தை அறிவிப்பார். அதன்படி தற்போதும் அதே பார்முலாவை பின்பற்றி டிசம்பர் 10-ந் தேதி பிற்பகல் 1:26 (1+2+6=9) மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.