Asianet News TamilAsianet News Tamil

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறதா அஜித்தின் 'வீரம்'? ஹீரோவாக இவரா... அப்போ வேற லெவல் தான்..!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'வீரம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில், பிரபல முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 

veeram movie remake in Hindi?
Author
Chennai, First Published Sep 3, 2021, 3:06 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'வீரம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில், பிரபல முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சமீபகாலமாக மற்ற தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட்டான படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதிலும், ஹிட்டான படங்களின் கதைகளில் நடிப்பதிலும், முன்னணி நடிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் எடுக்கப்பட்ட பல படங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற 'வீரம்' படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

veeram movie remake in Hindi?

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். 5 அண்ணன் தம்பிகளின் பாசம், அவர்களின் கொள்கைகள், அஜித்தின் அசத்தல் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள், சந்தானத்தின் காமெடி என ஒவ்வொன்றும் இந்த படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தது. 

veeram movie remake in Hindi?

இந்தப் படத்தை தான் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம், இந்தப்படத்தில் அஜித் நடித்த விநாயக் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இவர் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே சல்மான் கான் விஜய் நடித்து தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'மாஸ்டர்' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின, மேலும் இந்திக்கு ஏற்றாற்போல் இந்த கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடதக்கது.

veeram movie remake in Hindi?

விஜய்யை தொடர்ந்து தற்போது அஜீத்தின் படத்தில் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்த உறுதியான தகவல் வெளியாகும் வரை கார்த்திருப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios