veera give the shock news for namitha

கடந்த 10 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்துவரும் குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமிதா, பல்வேறு மொழிகளில் 50-துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'மச்சான்ஸ்' என்று இவர் அழைக்கும் ஒரு வார்த்தைக்காக இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.

அஜித், விஜய், மோகன் லால் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் சில காலம் சின்னத்திரை நிகழ்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார். அதே போல் சமீபத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சர்ச்சைகளைச் சந்தித்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாரத நேரத்தில் இவர் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டார்... திருமண அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திலேயே இவருக்கும் இவருடைய காதலர் வீராவிற்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. 

திருமணம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய இவர், எங்கள் இருவருக்கும் பல கருத்துக்கள் ஒத்துப் போவதால் இந்தத் திருமண வாழ்க்கை நன்றாக அமையும் என நம்புவதாகத் தெரிவித்தார். இவர் பேசிக் கொண்டிருக்கும் போது, நமிதா ஒரு சிறந்த நடிகை; ஆகவே கண்டிப்பாக அவர் விரும்பினால் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் எனத் தெரிவித்தார் வீரா.

ஆனால் நான் இதுவரை இந்தத் தகவலை நமீதாவிடம் கூறியது இல்லை, முதல் முறையாக உங்களிடம் கூறுகிறேன் என்று தெரிவித்தார். வீரா இதை தெரிவித்தும் நமிதா கண் கலங்கியவாறு வீராவை கட்டியணைத்து ஒரு குட்டி ரோமன்சே செய்துவிட்டார்.