Asianet News TamilAsianet News Tamil

அடித்து தூக்கிய 'வாத்தி கம்மிங்' பாடலின் வெறித்தன சாதனை...! சந்தோஷத்தில் தளபதி ரசிகர்கள்!

பட்டையை கிளப்பும் இசையில், புரியாமல் இருந்தாலும் புதிதான வார்த்தைகள் என படு வித்தியாசமாக இருந்த, வாத்தி கம்மிங் பாடல் வெளியான போதே டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது, 70 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
 

vathi comming  song 70 million views
Author
Chennai, First Published Aug 22, 2020, 3:26 PM IST

பட்டையை கிளப்பும் இசையில், புரியாமல் இருந்தாலும் புதிதான வார்த்தைகள் என படு வித்தியாசமாக இருந்த, வாத்தி கம்மிங் பாடல் வெளியான போதே டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது, 70 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்: அசுர வளர்ச்சியில் அனிகா... மகாராணி கெட்டப்பில் முன்னணி நடிகைகளை வாயடைத்து போக வைத்த போட்டோ ஷூட்..!
 

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, மாஸ்டர் படம் ஏப்ரல் மாதமே, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாக இருந்த நிலையில் , கொரோனா பிரச்சனையின் காரணமாக தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. பிரமாண்ட செலவில் உருவாகியுள்ளதால் இந்தப்படம் கண்டிப்பாக, திரையரங்கில் தான் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஸேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

vathi comming  song 70 million views

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் முரட்டு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி தீனா, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, ரம்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

மேலும் செய்திகள்: மூன்று மகன்களுக்கு தாயான பிறகும் யங் லுக்கில் ஜொலிக்கும் இயக்குனர் ஹரியின் மனைவி ப்ரீத்தா விஜயகுமார்..!
 

'மாஸ்டர்' படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு என அனைத்து பாடல்களும்,  ரசிகர்களை கவர்ந்து சாதனை படைத்து விட்டது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரவருக்கு பிடித்த வர்ஷனில் டான்ஸ் ஆடி வெளியிட்டு லைக்குகளை அள்ளினார்.

vathi comming  song 70 million views

இது ஒரு புறம் இருக்க, தற்போது வாத்தி கம்மிங் பாடல், 70 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை, தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சும்மா தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios