Asianet News TamilAsianet News Tamil

பெற்றோரிடம் கொள்ளை அடித்து கணவனுடன் சுகமாக வாழ  துடிக்கும் வழிப்பறி கோஷ்டி..வறுத்தெடுத்த வசந்த பாலன்...

vasanthabalan updated his status private channel show
vasanthabalan updated-his-status-private-channel-show
Author
First Published Mar 24, 2017, 6:33 PM IST


கடந்த வாரம் சமூகவலைதளத்தில் ரௌண்டடித்த செய்தி என்னன்னா? விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானாவில் பெண்களின் அட்ராசிட்டீஸ்தான். அதிலும் குறிப்பாக மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கவேண்டும் என சொன்ன பெண்ணை கலாய்த்து பல மீம்ஸ் உருவாகி வருகிறது.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அதிரடியான கருத்தை மிகவும் அட்டகாசமாக பதிவு செய்துள்ளார்; சமீபத்திய நீயாநானாவில் வெளியான 

பெண்களே தங்கள் பெற்றோரிடம் வரதட்சணை கேட்ட நிகழ்ச்சியைப்பார்த்தேன்.

இன்று இணையத்தின் வைரல் அது தான்.

பெண்கள் படுகிற பாலியல் தொல்லைகளை எண்ணி என்னை போன்றோர் எல்லாம் கலங்கி கொண்டிருக்கிற நிலையில்,

மகளை உள்ளங்கையில் வைத்து தாங்குகிற பெற்றோர்கள் உள்ள குடும்பங்களில் 

பெண்களின் மனநிலை திருகி போய் கிடக்கிறது.

எந்த அறமின்றி தன் பெற்றோரிடம் கொள்ளை அடித்து விட்டு கணவனுடன் சுகமாக செட்டில் ஆகிவிட துடிக்கும்

இந்த பெண்களை வழிப்பறி கோஷ்டி என்று சொல்வது சரியே.

பெற்று விட்ட காரணத்துக்காக எனக்கு நீ செய்தே ஆகவேண்டும் என்கிற கொம்பை பிடித்து கொண்டு 

இந்த பெண்கள் ஊஞ்சல் விளையாடுகிறார்கள்.

அப்படி செய்யாத பெற்றோர்களை குற்றவாளி கூண்டில் நிப்பாட்டிவிட துடிக்கிறார்கள்.

இந்த மாதிரியான பெண்களை உருவாக்கியதில் 

இந்த சமுகத்திற்கான பங்கு மிக அதிகம்.

நம் கலை இலக்கியம் பண்பாடு நாடகம் பத்திரிகை தொலைக்காட்சி சினிமா முறையற்ற கல்விச்சூழல் இப்படி எல்லாவற்றுக்கும் பங்கு இருக்கிறது.

கடந்த இருபது வருடங்களாக எஸ்எஸ்எல்சி 

ப்ளஸ் டு தேர்வில் மாணவர்களை விட 

மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

இந்த கல்விக்கூடங்கள் 

எந்த மாதிரியான பெண்களை உற்பத்தி பண்ணி 

இந்த உலகத்தில் உலவ விட்டுள்ளது 

என்பதன் ஒரு சதவித உதாரணமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துள்ளார்கள்.ஆண்களை விட பலதுறைகளில் சாதித்து காட்டியுள்ளார்கள்.அவர்களை நான் கூறவில்லை,பல பெண்கவிஞர்கள் படைப்பாளிகள் முளைத்து வந்துள்ளார்கள்.அவர்களை நான் கூறவில்லை.

ஆனால் ஒரு சதவித பெண்களின் கண்ணோட்டம் பொதுநலமின்றி சுயநலம் சார்ந்ததாக உள்ளது என்பது இந்த நிகழ்ச்சியை கண்டால் தெளிவாக புரிகிறது.அந்த பெண்களின் அம்மாக்களை பார்க்கையில் நம் அம்மாக்களை தமிழ் பெண்களை பார்ப்பது போல் உள்ளது.ஆனால் இவர்கள் அம்மாக்களின் குணங்களுக்கு முற்றிலும மாறு்பட்டவர்கள்.

நோய்மையுற்ற சமுகமாக மாறிவிட்டதன் அடையாளம் பெண்கள் இது போன்று தவறான பாதையில் நின்று உரிமை கோருகிறார்கள்.

ஒரு பக்கம் பெண்விடுதலையின் குரல் உயரத்தில் ஒலித்தவண்ணம் உள்ளது.

நாளைய பெண்களில் ஒரு சாரார் சுயநலம் பிடித்த கிருமிகளாக விஷ வித்துகளாக வளர்ந்து நிற்கிறார்களா ?

ஆண் ஏதாவது விதத்தில் பெற்றோரோடு முரண்பட்டு தனியாக வேலை தேடி போய் உலகத்தை புரிந்து கொள்கிறான்.

ஆனால் இந்த பெண்கள் நாங்கள் பாவம் பெண்கள் என்கிற பரிதாபத்தை பயன்படுத்தி கொண்டு 

இன்னும் குடும்பத்தை சுரண்ட பார்க்கிறார்களா?.

இவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் நிலையை அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

ஜீன் முலம் குணம் கடத்தப்படும் தானே.

இதற்கு காரணங்கள் என்ன?

1. இன்னும்ஆண் குழ்ந்தைகளை முன்னிலை படுத்தும் பெற்றோர்கள்..

2. ஆண்கள் அடிமையாகி போய் கிடக்கும் குடிப்பழக்கம்.

3. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை 

4, நம் குழ்ந்தைகளுக்கு குடும்பத்தின் கஷ்டம் தெரியக்கூடாது என்று மறைத்தன் விளைவு

5. நாம் கஷ்டப்படலாம் ஆனால் நம் குழந்தைகள் ஆடம்பரமாக வாழ வேண்டும என்று பெற்றோர்களின் மனநிலை

6,லஞ்சம் கொடுத்து ஆண் குழந்தைகளுககு வாங்கி தந்த டாக்டர் சீட்டு இஞ்சினியர் சீட்டு..

7.அப்பாக்கள் செய்யும் முறையற்ற வியாபாரம் நேர்மையற்ற பணம் சேர்ப்பு

8.பணத்தால் எல்லாத்தையும் வாங்கிவிடலாம் என்கிற சமுகத்தின் நிலமை

9.நேர்மையற்ற தலைவர்கள்

10.புளுத்து போய் கிடக்கும் மோசடிகள்.

11. குடும்ப அமைப்புகளின் நம்பிக்கையின்மை 

12, நமக்கு ஒன்னுன்னா நம் அண்ணன் தம்பி வர மாட்டான் அவன் மனைவி பேச்சை கேட்டு விட்டு இருந்து விடுவான் என்கிற நிதர்சனம் புரிந்ததன் விளைவு

இப்படி நிறைய........

ஆண்களை அழைத்து கேட்டால் சமுகத்தின் இன்னொரு முகமும் வெளிச்சத்துக்கு வரும்.

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios