இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர்  விக்ரமின் மகன் துருவ் நடித்து வரும், 'வர்மா' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது படக்குழு.

இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வரும், 'வர்மா' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்பதை உறுதி படுத்தும் விதமாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் காதலர்களின் மாதமாக கருதப்படும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், துருவ்க்கு ஜோடியாக நடிகை மேகா செளத்ரி நடித்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் 'காலா' பட நடிகை ஈஸ்வரிராவ், பிக்பாஸ் புகழ் ரைசா, உள்பட பலர் நடித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.