பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படத்தின் அடுத்த இயக்குநர் யார் என்பது கூட முடிவாகாத நிலையில் அதன் கதாநாயகி யார் என்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா. படம் கைவிடப்பட்டதாக பலரும் பேசிவரும் நிலையில் விக்ரமின் வற்புறுத்தலுக்காகவே கதாநாயகியின் பெயர் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது.

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. இந்தப் படம்தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படபிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த நிலையில் தயாரிப்பாளர் இயக்குநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. 

இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்குக்கு அடுத்த இயக்குநர் யார் என்பதைக் கூட அறிவிக்காத நிலையில் புதிய கதாநாயகி தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான ’அக்டோபர்’ படத்தில் அறிமுகமாகிக்கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாகத் தேர்வாகியுள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்படத்தை இயக்க தெலுங்கு ஒரிஜினல் இயக்குநர் சந்தீப் வங்காவையே தயாரிப்பாளர் கேட்டுக்கொண்ட நிலையில் அவர் இந்திப்படம் இயக்குவதில் பிசியாக இருப்பதால் அவரிடம்  உதவி இயக்குநராகப் பணியாற்றியகிரிஷய்யா என்பவர்  தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வமான தகவலை தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை.