சமீபத்தில் தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தங்கப்பதக்கம் வென்று  தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர் கோமதி மாரிமுத்து.

அன்னையர் தினத்தை முன்னிட்டு, இவருடைய அம்மாவையும் கௌரவிக்கும் விதமாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது விழாவில் கோமதியின் தாயாருக்கு நடிகை வரலட்சுமி விருது  கொடுத்து கௌரவித்துள்ளார்.

 

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, கோமதி மற்றும் அவருடைய தாயாரை கடவுள் ஆசீர்வதிப்பார்...  இவருக்கு அன்னையர் தின விருதினை கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி, இதே போல் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள் என வரலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகை தன்ஷிகாவும் கலந்து கொண்டு, வரலக்ஷ்மியுடன் இணைந்து விருது வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.