இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2 ஆம் தேதி, தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மிக பிரமாண்டமாக நடைபெற்று பெற்றது. 

இந்த விழாவில் சர்க்கார் படத்தின் ஒட்டுமொத்த படக்குழு, மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய இவர் ஆரம்பிக்கும் போதே நான் அதிகமாக பேச மாட்டேன்... என தன்னுடைய பேச்சை துவங்கினார். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவருக்கு சில கனவுகள் நிறைவேறும் ஆனால் இந்த படத்தின் மூலம் தன்னுடைய ஒட்டு மொத்தமாக தன்னுடைய நான்கு  கனவுகள் நிரைவேறி விட்டதாக கூறினார். 

முதலாவதாக, சன் பிச்சர்ஸ் மூலம் பெரிய நிறுவனம் எடுக்கும் படத்திலும், இரண்டாவதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், மூன்றாவதாக ஆர் ரகுமான் இசையிலும், நான்காவதாக விஜய்யுடன் நடித்து விட்டதாக உணர்ச்சி பூர்வமாக கூறினார்.

இவரின் இந்த அதிக மகிழ்ச்சிக்கு காரணம் இவரும் ஒரு தீவிர விஜய் வெறியையும். மேலும் பலமுறை விஜய் படத்தை விசில் அடித்து, கைதட்டி ரசித்து பார்த்துள்ளதாகவும் கூறினார். 

அதேபோல் ஒருமுறை வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, ஒரு வெள்ளைக்காரன் வந்து ஏதோ சொல்லிவிட்டு போயிட்டான்... அப்போ நான் அவனை அடிக்க போய்விட்டேன், எப்படி எங்க தளபதிய பற்றி நீ சொல்லலாம் என... இது அவருக்கே கூட தெரியும் என கூறினார்.

மேலும் இந்த படத்தின் மூலம், சண்டை கோழி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ளதாவும். கீர்த்தி சுரேஷ் மிகவும் அருமையான நடிகை என்று கூறி படக்குழுவினருக்கு, விஜய்க்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.