வாரிசு நடிகையான வரலட்சுமி சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகையாக அறிமுகம் கொடுத்தவர். இந்த படத்தை தொடர்ந்து  இயக்குனர் பாலா இயக்கத்தில் 'தாரைதப்பட்டை'  படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

தற்போது தமிழ் மட்டும் இன்றி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும், திருட்டு விசிடி ஒழிப்பு முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர் படப்பிடிபில்  கலந்து கொண்ட பின் காருக்குள் வந்த போது அவருடைய கார் ஓட்டுநர், கடந்த வாரம் வெளியான "வேலை இல்லா பட்டதாரி 2 " படத்தை பார்த்துக்கொண்டு இருந்தாராம். இதனை பார்த்து மிகவும் ஷாக் ஆன வரலட்சுமி அவரை மிகவும் வன்மையாக கண்டித்ததுடன்.

உங்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் என்னிடம் சொல்லுங்கள் நான் கூட டிக்கெட் வாங்கி தருகிறேன் படம் பார்த்து விட்டு வாருங்கள். ஆனால் இது போன்று திருட்டு தனமாக பார்க்க வேண்டாம். மேலும் சினிமா துறையில் இருந்து கொண்டு நாமே இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என கையும் களவுமாக பிடித்த கார் ஓட்டுனரை  கண்டித்தாராம்.