கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடித்து சமீபத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் பல வருடங்களுக்கு பிறகு சிம்புவிற்கு மனம் நிறைந்த வெற்றியை கொடுத்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாட பிரபல ஸ்டார் ஹோட்டலில் சிம்பு தனது நண்பர்களுக்கும், நெருக்கமான சிலருக்கும் ட்ரீட் வைத்துள்ளார்.
இதில் நடிகை த்ரிஷா, வரலக்ஷ்மி சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகளும் மேலும் சில நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் தன் முதல் படமான போடா போடி படத்தில் சிம்புவுடன் நடித்த வரலக்ஷ்மி, தற்போது விஷாலின் காதல் தோல்வியில் துவண்டு இருப்பதாக கிசுகிசுக்க பட்டது.
தற்போது இந்த விழாவில் கலந்து கொண்ட வரலஷ்மி சிம்புவுடன் அளவுக்கு அதிகமாகவே நெருக்கம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் சங்க பிரச்னையில் இருந்து பல விஷயங்களில் விஷாலுக்கும்,சிம்புவிற்கு ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்த நிலையில், விஷாலை பிரிந்த சில மாதத்திலேயே சிம்புவுடன் வரலக்ஷ்மி நெருக்கம் காட்டுவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
