'வந்த ராஜாவாதான் வருவேன்' சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு! 

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அடுத்த மாதம் முதல் தேதியில் நிறைவடைய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர். அதாவது இந்த படத்தில் பாஸ்ட் சிங்கள் பாடல் வெளியிடும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிம்பு படத்தில், முதல்முறையாக ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளது, சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.