த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. இப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாமக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஜெய் பீம் படக்குழு மீது அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதேபோல் வன்னியர் சங்கமும் ஜெய் பீம் படக்குழு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

இவ்வாறு இந்த விவகாரத்தை பாமக-வினர் பூதாகரமாக்கி வந்தாலும், மறுபுறம் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். இதேபோல் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #Istandwithsuriya என்கிற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் அருண்குமார் ராஜா, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வன்னியர்கள் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதே சமூகத்தை சேர்ந்த நடிகர் அருண்குமார் ராஜா சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதால் இந்த வீடியோ வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

"