பழம்பெரும் நட்சத்திர ஜோடிகளான மஞ்சுளா - விஜயகுமாரின் மகள் வனிதா தற்போது பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இவருக்கும் நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 5 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு, ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு, 2010 ஆம் ஆண்டு அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பின் வனிதா பிரபல நடன இயக்குனர் ராபர்டை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர். ஆனால் தாங்கள் இருவரும் நல்ல நம்பர்கள் மட்டுமே தங்களுக்குள் காதல் என்று எதுவுமே இல்லை என்றும் கூறி வந்தனர்.

ஆனால், தற்போது ராபர்ட் வனிதாவின் பெயரை கையில் பச்சை குத்திகொண்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி, இவர்களுக்குள் இருந்தது நட்பு மட்டும் அல்ல காதல் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.