வனிதாவின் 3 ஆவது திருமண சர்ச்சை, இன்னும் ஓயாமல் பலரால் இந்த பிரச்சனை திரித்து திரித்து பெரிதாகி கொண்டே செல்கிறது. அந்த வகையில், வனிதாவை பற்றி விமர்சித்து சிக்கிய நாஞ்சில் விஜயன் வனிதா பிஜேபி கட்சி பற்றி விமர்சனம் செய்து பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா தன்னுடைய, 3 ஆவது திருமணம் குறித்து அறிவித்தபோது இவருக்கு எதிராக வழக்கம் போல் விமர்சனம் செய்பவர்கள் விமர்சித்தாலும், பலர் மனதார இவருக்கு இந்த வாழ்க்கை நிலைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். அதே போல் வனிதாவின் இந்த முடிவுக்கு அவருடைய இரண்டு மகள்களும் மனதார தங்களுடைய ஆதரவை தெரிவித்ததால் மட்டுமே, மறுமணம் குறித்து முடிவு எடுத்ததாக வனிதா தெரிவித்தார்.

ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் வனிதாவுக்கு, பீட்டர் பால் மனைவி எலிசபெத் மூலம் பிரச்சனை வந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அவர், தற்போது சட்ட ரீதியாக தன்னுடைய கணவர் வேண்டும் என போராடி வருகிறார். அதே போல் இவருக்கு நீதி வாங்க போராடுகிறோம் என்கிற போர்வையில், சில ஊடகங்கள் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்திரன், நாஞ்சில் விஜயன் போன்றோர்  சமூக வலைத்தளத்தில் விவாதம் நடத்தியது ரொம்ப ஓவராகவே தெரிந்தது.

மேலும்  யூடியூப் நடத்தி வரும் நாஞ்சில் விஜயன் போன்றோர் வேண்டும் என்றே தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக  வனிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிலும் சூர்யா தேவி என்கிற பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வனிதாவுக்கு எதிராக பிஜேபி செயல்படுவதன் நோக்கம் தன்னுடைய தந்தை விஜயகுமார் தான் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் வனிதா. இந்த வீடியோவை நாஞ்சில் விஜயன் வெளியிட்டு மீண்டும் வாண்டடாக வனிதாவின் விஷயத்தில் மூக்கை  நுழைத்துள்ளார்.

அந்த வீடியோ இதோ  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னடா இது பிஜேபி க்கு வந்த சோதனை

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on Jul 24, 2020 at 4:11am PDT