பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் முதல் ப்ரோமோவில், இந்த வாரம் மதுமிதா தற்கொலை முயற்சியை கையில் எடுத்ததால் வெளியேறி விட்டாலும், நிச்சயம் இன்றைய தினம் எவிக்ஷன் உண்டு என்பதை கூறினார்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், நீங்க ஏன் உள்ளே வந்தீங்க, நீக்க ஏன் உள்ளே வந்தீங்க என கேட்பது இருக்கட்டும். என கூறி, வணிதாவிடம் நீங்கள் ஏன் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள் என கமல் கேட்டார்.

இதற்கு பதில் சொன்ன வனிதா, ஏதோ ஒரு விதத்தில், மக்கள் தன்னை மிஸ் செய்ததாக தெரிய வந்தது, என மீண்டும் அதனை அழுத்தமாக கூறி தன்னுடைய வார்த்தையை பதிவு செய்தார். இதை தொடர்ந்து நான் மிகவும் உங்களை மிஸ் செய்ததாக கூறுகிறார்.

வனிதாவின் இந்த வார்த்தையை கேட்டதும், சாண்டி பக்கத்தில் இருந்த முகேன் மடியில் சாய்ந்தார். இதற்கு கமல், என்ன சாண்டி தலை கியரா ஆகிட்டா என கேட்க. ஆமாம் சார், தலை கொஞ்சம் கியரா... ஆகிவிட்டது என பதில் சொல்கிறார்.  இவரின் இந்த பதில் இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களையும் கை தட்ட வைத்தது.