பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் நடிகை வனிதா. இவர் வெளியேற மாட்டார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் என வெளியேறி அனைத்து பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். 

எனினும் இதில் ஏதேனும் ட்விஸ்ட் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதுபோல் எந்த ட்விஸ்டும் இல்லை வெளியேறியது உறுதி தான் என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவரிடம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே இருந்தது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் ஊடகத்தை சேர்ந்தவர்கள். அனைவரது கேள்விக்கும் மிகவும் பொறுமையாக தன்னுடைய பதிலை கொடுத்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், கவினை அடுத்து முகேனை காதலிப்பதாக கூறி வரும் அபியின் புதிய காதல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நண்பர்கள் என்பதையும் தாண்டி, அபி மற்றும் முகேன் இருவரும் காதலர்கள் போல் இருக்கிறார்கள்.  இவர்கள் நடந்து கொள்ளும் விதமும் அப்படிதான் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே முகேனுக்கு 'ஸ்பார்கல்' என்கிற காதலி உள்ளார். 

இதுகுறித்து அவரிடம் வனிதா கேட்டதாகவும் கூறியுள்ளார். எனவே உள்ளே வந்தால் இப்படித்தான் இருக்கும், என்பதை தெளிவாக கூறி விட்டு பின்பு தான் போட்டியாளர்கள் உள்ளே வந்திருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது முகேன் காதல் விவகாரத்தை வெளிப்படுத்தி, அபிராமியை காதலிப்பது போல் நடித்து வருகிறார் என்கிற முகத்திரையை கிழித்துள்ளார் வனிதா.