Asianet News TamilAsianet News Tamil

லாஸ்லியாவை பற்றி உண்மையை போட்டுடைத்த வனிதா..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா ஒரு நேர்காணலில் தெரிவிக்கும்போது கவின், லாஸ்லியா என அனைவர் பற்றியும் உண்மையை போட்டு உடைத்துள்ளார்

vanitha open talk about losliya
Author
Chennai, First Published Jul 20, 2019, 4:05 PM IST

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா ஒரு நேர்காணலில் தெரிவிக்கும்போது கவின் லாஸ்லியா என அனைவர் பற்றியும் உண்மையை போட்டு உடைத்துள்ளார்

vanitha open talk about losliya

அப்போது, "நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நான் நானாகவே தான் இருந்தேன்... மற்றவர்களை பார்க்கும்போது அவர்கள் ஏற்கனவே சென்ற வருடம் வெளியான நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் இப்படித்தான் இருக்கவேண்டும் என தனக்குள் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு நடக்கின்றனர். 

vanitha open talk about losliya

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் லாஸ்லியா ஒன்னும் அவ்வளவு அமைதியாக.. கோபப்படாத.. எப்போதும் சாந்தமாக சிரித்துக் கொண்டே இருக்கும் நபர் அல்ல.. கோபப்பட்டால் கத்தி பேசக்கூடிய ஆள் தான் அவர். ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அப்படியே நடிக்கின்றனர் என தெரிவித்தார்.

vanitha open talk about losliya

மேலும் கவினை பற்றி சொல்லும் போது, கவினின் காதல் விவகாரம் எல்லாம் சும்மா ஒன்றுமே கிடையாது... அவர் எதோ விளையாட்டுக்கு எல்லார்கிட்டயும் பேசிக்கொண்டே இருப்பார்.. அவ்வளவுதான். காதலாவது மண்ணாங்கட்டியாவது என குறிப்பிட்டுள்ளார் வனிதா. மேலும் இவர்கள் அனைவருமே மக்கள் மத்தியில், எப்படியாவது நல்லவங்க என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பதற்காக நடிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார் வனிதா.

Follow Us:
Download App:
  • android
  • ios