பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுள் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜோவித்தாவை கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி கடத்தி சென்றதாக, வனிதாவின் இரண்டாவது கணவர் ஆனந்த் ராஜ் ஹைத்ராபாத் அருகே உள்ள சைலாந்த்ராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். 

பின்னர் கடந்த 4 மாதங்களாக ஜோவிதாவை தேடி வந்ததாகவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக வனிதா உடன் ஜோவிதா உள்ளதை அறிந்து சென்னைக்கு வந்ததாக தெரிவித்து உள்ளார். நேற்று முன்  தினம் தெலுங்கானா போலீஸ் மற்றும் மனித உரிமை ஆணைய அதிகாரி மற்றும் நசரத்பேட்டை போலீசார் என அனைவரும் நேற்று காலை வனிதாவிடம்  பிக்பாஸ் வீட்டிலேயே தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர், நேற்று மாலை 5 மணிக்கு வனிதாவின் மகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்க திட்டமிட்டு மகளை  வரவைக்க கூறி உள்ளனர் போலீசார். அதன் படி, நேற்று மாலை 5 மணிக்கு ஜோவிதா பிக்பாங்ஸ் வீட்டை  அடைந்தார் வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் வனிதாவின் மகளை பாதுகாப்பாக அழைத்து வந்தார். 
பின்னர் ஜோவிகாவுடன் தனியாக விசாரணை நடத்தி ஓப்புதல் வாக்கு மூலம் வாங்கப்பட்டது. 

விசாரணையில் ஜோவிகா கூறியது: நான் என் விருப்பமாக தான் அம்மா உடன் சென்றேன். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அம்மாவிற்கு போன் செய்து  தன்னை அழைத்து செல்லுங்கள் என்றேன்.அம்மாவும் ஒரு காரில் வந்தார்.அங்கிருந்து நேராக கோவை சென்றோம். அங்கு ஒரு ஓட்டலில் தங்கி இருந்தோம். பின்னர் எங்கள்  உறவினர் ராகவி அத்தை வீட்டில் தங்கி இருந்தோம். அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதால் தற்போது. நானும் என் அக்காவும் மற்றொரு அபார்ட்மெண்டில் தங்கி இருக்கோம்..எங்களை பார்த்துக்கொள்ள வேலை ஆட்கள் இருகாங்க.. அத்தையும் இருக்காங்க. என் அப்பா உடன் வசிப்பது எனக்கு பிடிக்கவில்லை.. எப்போதும் அப்பாவின் நண்பர்கள்  வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுள் ஒரு சிலர் பெயர் மட்டுமே எனக்கு தெரியும். எனவே நான் என் அம்மா உடன் இருக்க  விருப்பபடுகிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதன் படி, தெலுங்கானாவில் இருந்து வந்திருந்த வனிதாவின் இரண்டாவது கணவர் ஆனந்த் ராஜ் வந்த வேகத்தில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவத்தால் பிக்பாஸ் வீட்டில் ஒரு விதமான பரபரப்பு  காணப்படுகிறது.