Valimai Trailer : டாப்கியரில் தீப்பிடிக்கும் அஜித்தின் அசத்தல் அட்ராசிட்டி..! வர்ரே வாவ் வலிமை டிரெய்லர்

வலிமை டிரெய்லர் ரிலீஸான வெறும் ஐம்பது நிமிடங்களில் 1.2 மில்லியன் வியூஸை கடந்து அகில உலக அட்ராசிட்டி பண்ணிக் கொண்டிருக்கிறது.

Valimai Trailer and looks of Ajith look

தியேட்டர் திரையில் தீ பிடித்துப் பார்த்திருப்பீங்க பல படங்களின் தாறுமாறு மேக்கிங்கில்! ஆனால் மொபைல் ஸ்கிரீனில் தீப் பிடித்துப் பார்த்திருக்கியா நண்பா ஒரு படத்துக்கான ஜஸ்ட் டிரெய்லரில். இப்ப உலகம் முழுவதும் அது நடந்துட்டு இருக்குது!

காரணம்?

ஒரு ஆளு!

யாரு?

வேறு யாரு!

நம்ம ”தல” தான்..

ஸாரி ஸாரி.. அவர் இப்போ தல இல்ல ‘ஏ.கே.’..!

Valimai Trailer and looks of Ajith look

 

வலிமை டிரெய்லர் ரிலீஸான வெறும் ஐம்பது நிமிடங்களில் 1.2 மில்லியன் வியூஸை கடந்து அகில உலக அட்ராசிட்டி பண்ணிக் கொண்டிருக்கிறது.

எப்படி இருக்குது நண்பா டிரெய்லர்?

கதையின் முக்கிய களம் – மதுரை! தல….மன்னிக்கவும் டிரெய்லரை பார்த்த உத்வேகத்துல தானா வந்துடுச்சு அந்த வார்த்தை. நம்ம அஜித், இந்தப் படத்தில் நீட் அண்டு ஃபிட்  போலீஸ் அதிகாரி. அதிலும் கேடுகெட்ட கிரிமினல்களை தேடிப் பிடிச்சு அழிக்கிற அக்மார்க் ஆக்‌ஷன் மேன்.

டிரெய்லரின் ஆரம்பித்திலேயே அதிர அதிர கியர் சேஞ்ச் பண்ணுகின்றன ஏ.கே.வின் கரங்கள். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் அடிச்சு தூக்குகிறார் ஆக்‌ஷனில். ‘மதுரையை சுற்றி நடக்குற எல்லா மர்டரையும் ஜெயில்ல வெச்சுதான் பிளான் பண்ணுறாய்ங்க’ என்று கிரிமினல் எங்கிருந்து ஸ்கெட்ச் போடுறாங்க என்பதை கழுகுப் பார்வையில் கொத்தி நிறுத்துகிறது ஒரு போலீஸ் அதிகாரியின் டயலாக். அடுத்த நொடியில், கோவில் திருவிழாவில் ‘அர்ஜூனனை எங்கேம்மா?’ என்று அம்மா செண்டிமெண்டுக்குள் நுழையும் இயக்குநர் விநோத், அடுத்த செகண்டில் தட்டி தூக்குகிறார் ஏ.கே.வின் மாஸ் வேல்யூவை….

Valimai Trailer and looks of Ajith look

‘பத்து வருஷமா தேடிட்டிருந்த கேங்கை எப்படிடா பத்தே நாள்ள முடிச்சாரு?’ என்று பொறி பறக்கும் போலீஸ் அதிகாரியான அஜித்தின் சாகசத்தை சிம்பிளாக ஒரே வரியில் சொல்கிறது அந்த பஞ்ச் டயலாக். அடுத்த காட்சிகள் சென்னைக்கு டிராவலானதை ஓ.எம்.ஆர். பேரிகார்டுகள் உணர்த்துகின்றன. கூடவே ‘வெல்கம் டூ சென்னை சார்’ என்று வரவேற்பு டயலாக்.

அஜித் வழக்கம்போல் பிளாக் கூலர் அணிந்து கெத்தாக நடக்கும் ஸீன்கள் அப்படியே மெர்சலாக கடந்து செல்கின்றன. அடுத்து ஸ்கிரீனில் தீப் பிடிக்கும் வண்ணம் பைக் சேஸிங், ஸ்மோக் மேக்கிங் என்று ஆக்‌ஷன் அல்லு தெறிக்கிறது. ‘தமிழ்நாடு போலீஸ் டீல் பண்ணினதுலேயே ரொம்ப மோசமான கேங் இதுவாதான் இருக்கும்’ என்று வில்லன் கூட்டத்தின் வெறித்தனத்துக்கு தரமான இன்ட்ரோ கொடுக்கிறார் ஏ.கே. ஹீரோயின் ஹீமாவும் லேடி காப்தான். அவர் பங்குக்கு ‘மொத்தம் ஆறாயிரம் கேஸுக்கு மேல’ என்று தன் பங்குக்கு கொளுத்திப் போடுகிறார். அடுத்து வில்லன்களின் வெறி விளையாட்டு ஸ்கிரீனை நிறைத்து அள்ளுகிறது.

அடுத்த செகண்டில் ‘வலிமைங்கிறது அடுத்தவனை காப்பாத்ததான். அழிக்க இல்ல’ என்று கூலர்ஸை மாட்டியபடி களமிறங்கும் ஏ.கே., மைக்ரோ செகண்ட்களில் பல வில்லன்களின் மேட்டரை முடிக்கிறார். அடுத்து வழக்கமான போலீஸ் டிப்பார்ட்மெண்ட் உள் குத்துகள், அம்மா சென்டிமெண்ட் என்று ஸ்லோவாகும்போதே….

‘தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்குற ஒருத்தனோட சமநிலை தவறுனா அவனோட கோபம் எப்படியிருக்குமுன்னு காட்டுறேன்’ என்று பிஸ்டலை தாண்டிய புல்லட்டாக கிளம்புகிறார் ஏ.கே. தடாலடி சேஸிங்குகள், தாறுமாறு ஆக்‌ஷன் பிளாக்குகள் என்று நிறைவு நொடியை நோக்கி அனல் கக்கி நகர்கிறது.

வழக்கமாக இப்படியான ஆக்‌ஷன்  பட டிரெய்லர்களின் இறுதி வசனமானது ஹீரோ சொல்வதாகதான் இருக்கும். ஆனால் தாராளமனிதரான ஏ.கே.வின் வழக்கமான கொள்கையின் படி வேறு ஒரு நபரின் வெறி டயலாக்கோடு அது முடிகிறது. இந்த முறை அது வில்லன்!

மொத்தமாக மூன்று நிமிடங்கள் ஆறு நொடிகள் அல்லு தெறிக்க ஓடி அடங்கும் வலிமை பட டிரெய்லர் சொல்லும் விஷயமென்னவென்றால்….

‘அப்டேட் கேட்ட இத்தனை வருஷ காத்திருப்பை வெறும் மூன்றே நிமிடங்களில் முழுமையாக நிறைவு செய்திருக்கிறார்கள்’ என்பதே.

ஏ.கே.. சேஸிங்கை தொடங்கியாச்சு….

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios