Asianet News TamilAsianet News Tamil

Valimai Update: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.... வருகிறது ‘வலிமை’ படத்தின் வேற மாறி அப்டேட்

வலிமை படக்குழு இதுவரை வெளியிட்ட அனைத்து அப்டேட்டுகளும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டன. அவ்வாறே அடுத்த அப்டேட்டும் வெளியாக உள்ளதாம்.

valimai team plans to release second single next week
Author
Tamil Nadu, First Published Nov 28, 2021, 2:40 PM IST

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். இப்படட்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

valimai team plans to release second single next week

பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படக்குழு இதுவரை வெளியிட்ட அனைத்து அப்டேட்டுகளும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டன. இந்நிலையில், வரும் வாரம் அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட வலிமை படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

valimai team plans to release second single next week

அதன்படி, வலிமை படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட உள்ளார்களாம். இது ஒரு ரொமாண்டிக் பாடல் என்றும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாடகர் சித் ஸ்ரீராம் ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios