Valimai Release Date அடுத்தாண்டு ஜனவரி 13-ம் தேதி வலிமை ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அஜித் ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். பிரதமர் முதல் விளையாட்டு வீரர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இது குறித்து ரசிகர்களை கண்டித்திருந்தார் தல அஜித்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வலிமை படபிடிப்பு முழுதும் சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி என்னவென்று அவர் உறுதியாக்கவில்லை.

இதை தொடர்ந்து தல பொங்கல் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பைக் டிரிப் சென்று விட்டு, தீபாவளிக்கு தான் அஜித் திரும்பி வந்தார். இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கினார்.

சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபடும் கேங்கை வளைத்து பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக தான் வலிமை படத்தில் அஜித் நடித்துள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் "வலிமை"படத்தின் ரிலீஸ் தேதிதான் இன்றைய ட்ரெண்டிங் நம்பர் ஒன்னாக உள்ளது. அதாவது அடுத்தாண்டு ஜனவரி 13-ம் தேதி வலிமை ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அஜித் ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

முன்னதாக இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், டிசம்பர் மாதத்தில் வலிமை படம் சென்சார் போர்ட் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.