valimai release date | தல அஜித் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பான "வலிமை" படம் ஜனவரி முதல் வாரத்தில் திரைக்கு வரலாம் என தகவல் கசிந்துள்ளது.

தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். பிரதமர் முதல் விளையாட்டு வீரர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இது குறித்து ரசிகர்களை கண்டித்திருந்தார் தல அஜித்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வலிமை படபிடிப்பு முழுதும் சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி என்னவென்று அவர் உறுதியாக்கவில்லை.

இதை தொடர்ந்து தல பொங்கல் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பைக் டிரிப் சென்று விட்டு, தீபாவளிக்கு தான் அஜித் திரும்பி வந்தார். இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கினார்.

சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபடும் கேங்கை வளைத்து பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக தான் வலிமை படத்தில் அஜித் நடித்துள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.

இந்நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இறுதி செய்து விட்டதாம். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் ரிலீசிற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். இதையடுத்து 2022 ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாம். டிசம்பர் மாதத்தில் வலிமை படம் சென்சார் போர்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.