வலிமை படக்குழு இதுவரை வெளியிட்ட அனைத்து அப்டேட்டுகளும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டன. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டையும் வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். இப்படட்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படக்குழு இதுவரை வெளியிட்ட அனைத்து அப்டேட்டுகளும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டன. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டையும் வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வருகிற டிசம்பர் 5-ந் தேதி மாலை 6:30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அப்பாடலின் புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.

வலிமை படத்தின் முதல் பாடலான ‘வேற மாறி’ பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் தான் இப்பாடலின் வரிகளையும் எழுதி உள்ளார். இப்பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video player