தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக  இயக்குனர், 'எச்.வினோத்' இயக்கத்திலேயே... 'வலிமை' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். 

தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர், 'எச்.வினோத்' இயக்கத்திலேயே... 'வலிமை' என்கிற படத்தில் நடிக்க உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இப்படத்தின் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகள், யார் யார் என படக்குழு முடிவு செய்து விட்டாலும், இதுவரை அதுகுறித்து எந்த அதிகார பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. மேலும் 13 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ள 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு, காட்சிகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் தற்போது, 'வலிமை' படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, இப்படம் முழுமையாக முடிக்கப்பட்டு அடுத்த வருடம் (2020 ஆம் ஆண்டு) தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பே இன்னும் ஆரம்பமாகாத நிலையில் இப்படி பரவி வரும் தகவல் உண்மையா என்பதை படக்குழு தான் கூற வேண்டும்.