Asianet News TamilAsianet News Tamil

Udhayanidhi: உதயநிதி பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் கொடுத்த 'வலிமை' தயாரிப்பாளர் போனி கபூர்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளது மட்டும் இன்றி, சர்பிரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

 

valimai movie producer Booney Kapoor gave a surprise for Udayanithi birthday
Author
Chennai, First Published Nov 27, 2021, 7:38 PM IST

பிரபல தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளது மட்டும் இன்றி, சர்பிரைஸ் கிஃப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்து, பின்னர் நடிகராக மாறியவர் உதயநிதி. சமீபத்தில் நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதே நேரத்தில் திரைப்படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

valimai movie producer Booney Kapoor gave a surprise for Udayanithi birthday

இந்நிலையில் இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை உதய நிதி கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் பல பிரபலங்கள், திமுக கட்சி தொண்டர்கள், மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்  பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர் உதயநிதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மும்பையில் இருந்து பறந்து வந்து உதயநிதியை சந்தித்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளது மட்டும் இன்றி, பரிசு ஒன்றையும் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

valimai movie producer Booney Kapoor gave a surprise for Udayanithi birthday

தமிழில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஹாலிவுட் லெவலில் கெத்து காட்டியுள்ளார் அஜித் என்பது இதற்க்கு முன்பு வந்த முன்னோட்ட வீடியோக்கள் மூலமாகவே தெரிந்தது.

valimai movie producer Booney Kapoor gave a surprise for Udayanithi birthday

அஜித்தின் படத்தை தொடர்ந்து உதயநிதி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நெஞ்சுக்கு நீதி' என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படம் ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆர்டிகள் 15 என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த்து வரும் நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios