வக்கட அப்பா ராவ் 16 வயது சிறுமிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண் கலைஞர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என்று ஸ்ரீரெட்டி டிவீட் போட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் முக்கிய திரையுலக புள்ளிகள் யார் என்று அவர்களை பெயர்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரிடம் சமாதானம் பேசி அவரை அமைதியாக இருக்க வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது அது நடக்காமல் போனது. 

ஸ்டுடியோவில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டது பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம் தான்  என கூறினார். மேலும் தானும், அபிராமும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இருவரும் உதட்டோடு உதடு வைத்து போஸ் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் கெஸ்ட் ஹவுஸுக்கு வா என்று பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் அழைத்தார். ஆனால் அங்கு சென்றபோது விநாயக் இல்லை என்றும் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்ற பிறகு கோனா வெங்கட் கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். பெண்களை ஓட விட்டு துரத்திப் பிடித்து உறவு கொண்டால் தான் அவருக்கு திருப்தி ஏற்படும் என பகிரங்கமாக அம்பலமாக்கினார்.

மேலும், வரும் நாட்களில் மேலும் இரண்டு பெரிய பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.  அந்த 2 பிரபலங்களின் பெயர்களை தற்போதே வெளியிட்டால் மக்கள் குழம்பிவிடுவார்கள். அதனால் ஒவ்வொருத்தரின் பெயராக வெளியிடுகிறேன் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்திருந்த நிலையில், இந்த லிஸ்டில் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் வக்கட அப்பா ராவ் 16 வயது சிறுமிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண் கலைஞர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என்று டிவீட் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. சில தினங்களுக்கு முன்பு டிவி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டி அப்பாராவ் பற்றி பேசினார். இதையடுத்து டிவி சேனலுக்கு போன் செய்த ஸ்ரேயா, ஸ்ரீவாணி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல பெண் அப்பராவின் சுயரூபத்தை தொலைகாட்சியில் வெட்ட வெளிச்சமாக்கினர். மேலும்  அப்பாராவ் தங்களிடம் தவறாக நடந்ததாக தெரிவித்துள்ளனர். தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ராவ் தன்னை ஒரு இரவு முழுவதும் பயன்படுத்திக் கொண்டதாக ஹேமா கண்கலங்கினார். இதனையடுத்து அதே டிவி சேனலுக்கு போன் செய்த அப்பாராவ் அந்த பெண்கள் அனைவரும் கூறியதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.