பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஒரு சில பிரச்சனைகள் தலைதூக்கி வந்தாலும், அது இரண்டு மணி நேரம் கூட நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்கிற நினைப்பில், போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய நிஜ முகத்தை மறைத்து போலியான முகத்தோடு விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... துவக்கத்திலேயே வைஷ்ணவி 'டானி எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணியில் உள்ளவர்கள் பயங்கரமாக சண்டை போடுவார்கள் என கூறுகிறார்'.

இவரின் கருத்துக்கு மற்ற போட்டியாளர்களும் 'டானி எந்த அணியில் இருந்தாலும், எதிர் அணியை எதிர்ப்பது போல் செயல்படுவதாக கூறி' வைஷ்ணவிக்கு சப்போர்ட் செய்கிறார்கள். 

இவர்கள் சொல்வதற்கு ஏற்றப்போல், டானி அணியில் உள்ள யாஷிகா எதிர் அணியை தாக்கி பேசுவது காட்டப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து தாடி பாலாஜி பேசுகையில், ஒருவரை எரிச்சல் படுத்தி ஜெயிப்பது விளையாட்டே இல்லை என கூறுகிறார். இதற்கு வைஷ்ணவி எல்லாமே உள்ளது என கூறுகிறார்.

இந்த அணியினரை கடுப்பேற்றுவது போலவே, தொடர்ந்து பேசுகிறார்கள் டானி அணியில் உள்ளவர்கள். எனினும் நேற்றைய தினம், வைஷ்ணவிக்கு சப்போர்ட் செய்து முதல் ஆளாக பேசியவர் டானி தான் ஆனால் இன்று அவருக்கு எதிராகவே சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார் வைஷ்ணவி என்பது குறிப்பிடத்தக்கது.